Categories
தேசிய செய்திகள்

பாந்த்ராவில் நடைபெற்ற போராட்டம், தடியடி கவலை அளிக்கிறது: மகாராஷ்ட்ரா முதல்வருடன் அமித்ஷா பேச்சு

மும்பை பாந்த்ரா போராட்டம் தொடர்பாக மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே உடன் அமித்ஷா தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், பாந்த்ராவில் நடைபெற்ற போராட்டம், தடியடி கவலை அளிக்கிறது.

இதுபோன்ற நிகழ்வுகள் கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தை பலவீனப்படுத்தும் எனவும் அவர் கூறியுள்ளார். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையில் ஒரு பகுதியாக மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். ஏப்ரல் 14ம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதை தொடர்ந்து ஒரு வாரத்திற்கு கடுமையாக ஊரடங்கு கடைபிடிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இதையடுத்து, மும்பை பாந்த்ராவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒன்றிணைந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பது சிரமமாக உள்ளது, இனியும் தங்களால் இங்கு இருக்க முடியாது, எனவே உடனடியாக எங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வேண்டும் என்று கோரி அவர்கள் போராட்டத்தில் இறங்கினர். கொரோனா பரவும் இந்த சூழ்நிலையில், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும், மும்பையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தொழிலாளர்கள் பாந்த்ரா நோக்கி வருவதாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை விரட்டி அடித்தனர். இந்த சம்பவம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசி மூலம் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே-வை தொடர்பு கொண்டு விசாரித்தார்.

Categories

Tech |