Categories
உலக செய்திகள்

கொரோனா தாக்கதால் மிரட்டிய ட்ரம்ப் – WHOக்கு ஆதரவாக களமிறங்கிய ஐநா …!!

கொரோனா தொற்றை தடுக்கும் போராட்டத்தில் உலக சுகாதார அமைப்பின் பங்கு அவசியமாகும் என ஐநா தலைவர் தெரிவித்துள்ளார்

கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளில் பரவி மக்களை அச்சுறுத்தி பல உயிர்களை எடுத்துள்ளது. கட்டுப்பாடுகள் பல விதிக்கப்பட்டாலும் தொற்றின் தாக்கம் அதிகரித்த வண்ணமே உள்ளது. இதனிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக சுகாதார அமைப்பு சீனாவிற்கு ஆதரவாக செயல்படுகிறது எனவும் அதற்கு நிதி ஒதுக்குவது பற்றி மறுபரிசீலனை செய்யப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய ஐநா தலைவர் அன்டோனியோ “கொரோனாவுக்கு எதிரான போரில் உலக சுகாதார அமைப்பின் நடவடிக்கை பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்தது அதனை ஆதரிக்க வேண்டியது அவசியம். எப்போதும் இல்லாத அளவு வைரஸ் பாதிப்பு அதிக அளவு ஏற்பட்டுள்ளது. அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவது அவசியம்.

ஒரு ஆய்வை பலர் பல வழியில் எடுத்துக் கொள்வது இயல்பான ஒன்று. தொற்றை கட்டுப்படுத்தி அதன் பின்னர் அவற்றை கையாளும் முறைகள் பற்றி மறுபரிசீலனை செய்யப்படும். தொற்று நோய்களை ஆராயத் தொடங்கினால்  எங்கே உருவானது, எப்படி உருவானது, எவ்வாறு கையாண்டார்கள் என அனைத்தையும் புரியவைக்க வெகு காலம் தேவைப்படும்.

இந்த சூழலில் கற்றுக்கொள்ளும் பாடங்கள் எதிர்காலத்தில் நிகழும் பேரிடர்களை சமாளிக்க உதவும். ஆனால் இப்போது அதற்கான நேரம் இல்லை உலக மக்களின் நலன் கருதி அனைவரும் ஒன்றாக போராடவேண்டும். கொரோனா தொற்று ஏற்படுத்திய பாதிப்புகள் இதுவரை நடந்திராத அளவுக்கு அபாரமானவை.

மனித இனத்திற்கு எதிரான தாக்குதலை காட்டிலும் பொருளாதாரம், சமூகம், மருத்துவ தாக்கங்கள் இதன் காரணமாக ஏற்பட்டுள்ளன. உறுப்பு நாடுகளுக்கு உதவ உலக சுகாதார அமைப்பு ஆயிரக்கணக்கான அலுவலர்களை வழிமுறை வகுக்கின்றது பாதிக்கப்பட்டோருக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது” என கூறினார்.

Categories

Tech |