Categories
உலக செய்திகள்

ஊரடங்கால் மக்களிடம் பணம் இல்லை – வியக்க வைத்த கனடா அரசின் நடவடிக்கை …!!

கன்னட அரசு ஊரடங்கினால் மக்களுக்கு ஏற்படும் பண பிரச்சனையை போக்க மசோதா ஒன்றை இயற்றியுள்ளது

உலகம் முழுவதும் கொரோனா தொற்றை தடுக்க ஊரடங்கு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரிய அளவில் பண பிரச்சினையால் அவதிப்பட்டு வருகின்றனர். சில நாடுகளில் தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமா அல்லது வேலை இழந்து வருவாய் இல்லாமல் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமா என்னும் விவாதமே நடைபெறும் அளவிற்கு சூழ்நிலை உள்ளது.

இந்நிலையில் கன்னடா மக்களுக்கு பண பிரச்சனையில் உதவ அரசு மசோதா ஒன்றை நிறைவேற்றியுள்ளது. அந்த மசோதா, நாட்டிலிருக்கும் நிறுவனங்கள் தொடர்ந்து இயங்க வசதியாக ஊழியர்களுக்கு அரசே ஊதியங்களை வழங்க வழி செய்துள்ளது. இதுவரை கனடாவில் 23,318 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டு 653 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை எதிர்க்கட்சியினரின் ஆதரவுடன் ஒருமனதாக அந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. நிறைவேற்றப்பட்ட மசோதாவின்படி நாட்டில் இயங்கிவரும் தொழில்கள் அதிக அளவு பாதிக்கப்படுவதை தவிர்க்க ஊழியர்களின் ஊதியத்தை 70% அரசே செலுத்தும். இதன் காரணமாக அரசுக்கு 50 பில்லியன் டாலர்கள் இழப்பை சந்திக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |