நாளைக்கு திமுக சார்பில் நடைபெற இருந்த அனைத்துக்கட்சி கூட்டம் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 21 நாட்கள் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்றோடு நிறைவடைய இருந்த நிலையில் காலை 10 மணிக்கு மக்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி ஊரடங்கை மேலும் 19 நாட்கள் நீட்டித்து மே 3ஆம் வரை ஊரடங்கு தொடரும் என அறிவித்தார்.
இதனிடையே தமிழகத்தில் நடைபெறும் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காகவும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய மாநில அரசின் அணுகுமுறை குறித்து ஆலோசனை நடத்துவதற்காக திமுக சார்பில் அனைத்து கட்சிகள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
ஏப்ரல் 15ஆம் தேதி ( நாளை ) காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதால் திமுக அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் 16ஆம் தேதி காணொளி காட்சி மூலம் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது.
முன்னதாக சமூக இடைவெளியை பின்பற்றுவோம் என்று திமுக தெரிவித்தும் அனுமதி வழங்க விலை என்பது குறிப்பிடத்தக்கது. அரசு தடை போட்டும் மக்களின் நலனுக்காக திமுக காணொளி மூலம் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்துவது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.