Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ ராசிக்கு …! யோகமான நாளாக இருக்கும் ..மன சஞ்சலம் நீங்கும் …!!

 மேஷம் ராசி அன்பர்களே  ...!   இன்று வரன்கள் வாயில் தேடி வரக்கூடிம். வழிபாட்டில் அதிக கவனம் செலுத்துவீர்கள். வாங்கல் கொடுக்கல்களை ஒழுங்கு செய்து கொள்ள முன்வருவீர்கள்.  பெண் வழி பிரச்சனைகளில் நல்ல முடிவு கிடைக்கும்.  யோகமான நாளாக தான் இன்றைய நாள் இருக்கும்.  யோசிக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும்.  இல்லத்திற்குத் தேவையான விலை உயர்ந்த பொருள்களை வாங்கக் கூடிய எண்ணம் மேலோங்கும் எதிர்பாராத தனலாபம் வந்து சேரலாம்.

பொருளாதாரம் மேம்படும்.  அதேபோல தைரியமும் இன்று உண்டாகும்.  மற்றவர்கள் ஒப்படைத்த வேலையை பொறுப்புடன் செய்து முடிப்பீர்கள்.  தேவையற்ற மன சஞ்சலம் நீங்கும். மற்றவரிடம் அனுசரித்து செல்வது மூலம் வீண் பிரச்சனைகள் வராமல் தடுக்க முடியும்.  இன்று எதைத் தொட்டாலும் ஓரளவு வெற்றி பெறும் நாளாகவே இருக்கும்.  முடிந்தால் ஆன்மிகப் பணியில் ஈடுபட்டு காரியங்களை பின்னர் செய்யுங்கள் சிறப்பாக இருக்கும்.

இன்று முக்கியமான பணியில் நீங்கள் ஈடுபடும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே  கொடுக்கம். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள்.  காரியங்கள் அனைத்துமே ரொம்ப நல்லபடியாக நடக்கும்.

 அதிர்ஷ்டமான திசை :  வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் :  2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் :  வெள்ளை மற்றும் மஞ்சள்

Categories

Tech |