சிம்மம் ராசி அன்பர்களே …! இன்று நிம்மதி கிடைப்பதற்கு சந்திரனை வழிபடுவது ரொம்ப நல்லது. பணவரவு திருப்திகரமாக இருக்கும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். கல்யாணக் கனவுகள் நனவாகும். மக்கள் செல்வங்களால் மகிழ்ச்சி கூடும். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு வேண்டும். முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்வதால் சில பிரச்சனைகள் ஏற்படும்.
வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மையை கொடுக்கும். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். விட்டுக்கொடுத்து சென்றால் அனைத்து விஷயங்களும் சிறப்பாகவே இருக்கும். பெண்கள் உங்களது செயல்களுக்கு மற்றவரது ஆதரவு கிடைக்கும். அடுத்தவர் பற்றிய விமர்சனங்கள் கிண்டல் கேலி பேச்சுக்கள் போன்றவை தவிர்ப்பது ரொம்ப நல்லது.
இன்று உற்றார் உறவினர் வகையிலும் உதவிகள் கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமல்லாமல் இன்று இல்லத்தில் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்துமே ரொம்ப நல்லபடியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் நீல நிறம்