Categories
உலக செய்திகள்

கதறி துடிக்கும் அமெரிக்கா…!! ஒரே நாளில் 2,407 பேர் பலி, 6 லட்சம் பேருக்கு கொரோனா …!!

அமெரிக்காவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியுள்ளது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.

 

நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் , பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 1,997,906 பேர் பாதித்துள்ளனர். 126,600 பேர் உயிரிழந்த நிலையில், 478,557 பேர் குணமடைந்துள்ளனர். 1,341,140 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 51,609 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர்.

The attack rate is relatively high as there's no immunity to it ...

 

உலக வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடும் விளைவுகளை சந்தித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 2,407 பேர் கொரோனாவால் இறந்துள்ளதால் மொத்த பலி எண்ணிக்கை 26,047ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறு லட்சத்தை தாண்டி 613,886 பேராக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் 38,820 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இது வரை இல்லாத அளவாக நேற்று தான் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |