பிரிட்டனில் அதிக மரணம் ஏற்படக் கொரோனா தொற்றை தவிர மற்ற காரணங்களும் இருக்கலாம் என கூறப்படுகிறது
கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி பல உயிர்களை எடுத்துள்ள நிலையில் பிரிட்டனில் மரணத்தின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளது. குறிப்பிட்ட வாரத்தில் 16387 பேர் பிரிட்டன் மற்றும் வேல்ஸில் மரணமடைந்துள்ளனர். தேசிய புள்ளிவிவர அலுவலகம் வாராந்திர புள்ளிவிவரங்களை வெளியிடத் ஆரம்பித்த 2005 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இந்த அளவு மரணங்கள் ஏற்பட்டதில்லை.
இதில் கொரோனாவால் மரணம் அடைந்தவர்கள் 3475 மட்டுமே . ஒரு வருடத்தின் இந்த காலகட்டத்தில் நிகழும் சராசரி மரண எண்ணிக்கையை காட்டிலும் இது 6000 அதிகம். இந்த அதிகப்படியான மரணங்களில் 60% மட்டுமே கொரோனா தொற்றினால் ஏற்பட்டது மீதி 40 சதவீதத்திற்கு என்ன காரணம் என்பது இதுவரை தெளிவாக தெரியவில்லை.
கொரோனா தொற்று மரணத்தில் சிலவை கண்டுபிடிக்கப்படாமலே நடந்திருக்கலாம் அல்லது தொற்று, பொதுமுடக்கம் போன்ற மற்ற காரணங்களாலும் இந்த மரணங்கள் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதோடு கொரோனா காரணமாக பிற நோய்களுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்ளாததாலும் வன்முறை தொடர்பான மரணங்களினாலும் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.