Categories
தேசிய செய்திகள்

ஏப்ரல் 20ம் தேதி முதல் எந்த தொழிலுக்கு எல்லாம் மத்திய அரசு அனுமதி!

ஊரடங்கு உத்தரவின் வழிமுறைகளை வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம்

கொரோனா பாதிப்பின் காரணமாக மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கபட்டுள்ள நிலையில், மத்திய அரசு ஊரடங்கு உத்தரவின் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியீட்டுள்ளது. அதில், ஏப்ரல் 20இல் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம்; ஆனால் ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பின் பிளம்பர், எலெக்ட்ரீஷியன், தச்சுவேலை, மோட்டார் மெக்கானிக் தொழில் செய்வோர் செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல  100 நாள் வேலை திட்டத்துக்கு அனுமதி அளித்துள்ளது. ஏப்ரல் 20ஆம் தேதி முதல் சிறு, குறு தொழிலில் ஈடுபடுவோர் பணிகளை தொடரலாம். ஏப்ரல் 20 முதல் விவசாயம், தோட்டக்கலை, பண்ணைத்தொழில், விளைபொருள் கொள்முதலுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவசாயம் சார்ந்த இயந்திர நிறுவனங்கள், பழுது நீக்கும் நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாநிலங்கள், மாவட்டங்களுக்கு இடையேயான மக்கள் போக்குவரத்து தடை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |