ராஜஸ்தானில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,034 ஆக உயர்ந்துள்ளது. நேற்று வெளியான தகவலின்பிடி, சுமார் 83 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1,005 ஆக உயர்ந்தது. இந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி, மேலும் 29 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஜெய்ப்பூரில் 15, ஜோத்பூரில் 7 மற்றும் கோட்டாவில் 7 பேருக்கு இன்று புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 1,035 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,076 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,815- லிருந்து 11,439ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழந்தோர் எண்ணிக்கை 377ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 1,306ஆக அதிகரித்துள்ளது. அதிகப்படியாக மகாராஷ்டிராவில் 2,455 பேருக்கும், தமிழகத்தில் 1,204 பேருக்கும் கொரோனா தொற்று பாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி செல்கிறது.