Categories
லைப் ஸ்டைல்

ஆடைகள் எப்பொழுதும் புதிதாக இருக்கவேண்டுமா.? உங்களுக்காக சில டிப்ஸ்..!!

பெண்கள் தங்களது விலை உயர்ந்த ஆடைகளை பாதுகாப்பது எப்படி என்று பார்க்கலாம்.

ஃபேன்சி பனாரஸ் புடவை என்றாலும் காஞ்சிபுரம் பட்டுப்புடவை என்றாலும் அவை ஜரிகை போல் இருப்பது தான் அழகு. பெபெண்கள் அதனாலே அவற்றின் மீது அதிகம் ஆசை கொள்வார்கள். ஆகவே பட்டுப்புடவைகள் புதிதுபோலவே வைத்துக்கொள்ள நாம் ஆசைப்படுவோம். இம்மாதிரியான விலை உயர்ந்த புடவைகளின் அழகே அதன் ஜரிகை தான்.

*  முதலில் நீங்கள் கடைக்கு சென்று ஒரு விலையுயர்ந்த புடவைகளையோ அல்லது வேறு எந்த உடையை வாங்கினாலும் அவைகளை  சூரிய வெளிச்சத்தில் பார்த்து அதன் பிறகு வாங்குங்கள்.

* விலை அதிகம் உள்ள புடவைகளை அணியும் முன்னர், மறக்காமல் அதில் “ஃபால்ஸ்” தைத்து அணியுங்கள். ஃபால்ஸைத் துவைத்து இஸ்திரிப் போட்டு தரமான நூலால் தைத்து அணிந்து கொள்ளுங்கள்.

* இம்மாதிரியான ஆடைகளை அணிந்து கழற்றிய பின் மடித்து வைக்காதீர்கள், அதை தவிர்த்து விடுங்கள். இப்படி துணிகளை மடித்து வைத்தால் அவற்றில் இருக்கு வியர்வை துணிகளில் கறைகளை ஏற்படுத்தி விடும்.

*பட்டுபுடவைகளில் ஏதேனும் கறை ஏற்பட்டால் அவை உடனே தண்ணீர் கொண்டு லேசாக அந்த இடத்தை மட்டும் சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

* துணிகளை வைக்கும் பீரோ அல்லது அலமாரியில் வரும் பூச்சிகளை விரட்டுவதற்கு  “ஓடோனில்”லை ஒரு துணியில் சுற்றி வைத்து கொள்ளுங்கள். நேரடியாக வைத்தால் இதன் வாசனை துணிகளில் ஒட்டிக் கொள்ளும். அணியும் போது அலமாரியி மற்றும் பீரோ வாசனையை தரும்.

* ரச கற்பூரத்தை தவிர்க்கவும். இதில் உள்ள ரசாயணப் பொருட்கள் ஜரிகை கருப்பதற்கு காரணமாக அமைகிறது. பர்ஃயூம் போன்ற வாசனைப் பொருட்களை நேரடியாக ஜரிகையில் தெளிப்பதை தவிர்ப்பது நல்லது.

* அணியும் போது உடைகள் கசங்குவது சகஜம். அதனால் அணிந்தபின் உடைகளை இஸ்திரி செய்து வைக்கவும்.

* விலை உயர்ந்த துணி வாங்கி உடைகள் தைக்க வேண்டும் என்றால் அதற்கு மறக்காமல் நல்ல தரமான, அதே நிறத்தில் உள்ள லைனிங் துணியை வாங்குங்கள். லைனிங் வைக்கவில்லை என்றால் வியர்வையால் ஆடை வீணாய் போய்விடும்.

இந்த குறிப்புகள் அனைத்தும் உங்களின் ஜரிகை மற்றும் விலையுயர்ந்த உடைகளை நீண்ட நாட்களுக்கு அழகு மாறாமல் பாதுகாப்பாக வைத்து கொள்வதற்கு உதவும்.

 

 

Categories

Tech |