Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு நெறிமுறைகள் : ஏப்., 20ம் தேதிக்கு பின்னர் எவையெலெல்லாம் இயங்கும், எதற்கெல்லாம் தடை – முழு விவரம்!

மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கின் போது பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் ஏப்ரல் 20ம் தேதிக்கு பின்னர் சிலவற்றிற்கு அனுமதி அளித்துள்ளது. எந்த தொழில்களுக்கெல்லாம் அனுமதி, எதெற்கெல்லாம் தடை தொடரும் என்பது குறித்த விரிவான தகவல்களை இங்கு காண்போம்.,

ஏப்ரல் 20ல் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம், ஆனால் ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

எதெற்கெல்லாம் அனுமதி :

  • ஏப்ரல் 20 முதல் கிராமப் பகுதிகள், சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ள ஆலைகள் சமூக இடைவெளியுடன் இயங்கலாம்.
  • ஏப்.20 முதல் அரசு நடவடிக்கைகளுக்கான கால் சென்டர் மையங்களை திறக்கலாம்
  • ஐ.டி.நிறுவனங்கள், ஐ.டி. தொடர்பான சேவைகள் 50% ஊழியர்களுடன் இயங்கலாம். அனுமதிக்கப்பட்ட நிறுவனங்களில் உடல் வெப்பநிலை பார்க்கும் கருவி கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
  • கனரக வாகன பழுது பார்ப்பு கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • ஏப்ரல் 20ம் தேதிக்கு பின் பிளம்பர், எலெக்ட்ரீஷியன், தச்சுவேலை, மோட்டார் மெக்கானிக் தொழில் செய்வோர் செயல்பட அனுமதி.
  • ஏப்ரல் 20ம் தேதி முதல் சிறு, குறு தொழிலில் ஈடுபடுவோர் பணிகளை தொடரலாம்.
  • ஏப்ரல் 20 முதல் மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள், பழக்கடைகள், பால் நிலையங்கள், இறைச்சிக்கடைகள் செயல்பட அனுமதி.
  • நெடுஞ்சாலையோர ஓட்டல்களை திறக்க அனுமதி
  • ஏப்ரல் 20 முதல் விவசாயம், தோட்டக்கலை, பண்ணைத் தொழில், விளைபொருள் கொள்முதலுக்கு அனுமதி
  • ஊரகப் பகுதியில் தொழில் நிறுவனங்கள், உணவுப் பதப்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் சிறு, குறு தொழில் சார்ந்த கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம்.
  • தேயிலை, காஃபி, ரப்பர் உற்பத்திப் பணிகளை 50 சதவீத ஊழியர்களுடன் மேற்கொள்ளலாம்
  • பால் உற்பத்தி மற்றும் விநியோகம் வழக்கம் போல நடைபெறலாம்
  • ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள்படி வங்கிகள், ஏ.டி.எம்-கள் செயல்படும்.
  • விவசாய உபகரணங்கள், உரங்கள் விற்பனை நிலையங்கள் செயல்படலாம். விவசாயப் பொருள் போக்குவரத்து தங்குதடையின்றி நடைபெறுவதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.
  • விவசாய பொருட்கள் கொள்முதல் நிலையங்கள் செயல்பட தடையில்லை.
  • விவசாயம் சார்ந்த இயந்திர நிறுவனங்கள், பழுது நீக்கும் நிறுவனங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • மீன்பிடித் தொழில் மற்றும் மீன் விற்பனைக்கு அனுமதி
  • ஏப்ரல் 20ம் தேதி முதல் 100 நாள் வேலை திட்டத்திற்கு அனுமதி. 100 நாள் வேலை திட்டத்தின்போது சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்
  • கல்வி நிறுவனங்கள் ஆன்-லைன் மூலம் வகுப்புகளை நடத்தலாம்
  • அத்தியாவசியப் பொருள் உற்பத்தி நிறுவனங்கள் இயங்க தடை இல்லை.
  • கொரியர் நிறுவனங்கள் செயல்படலாம் ஆன்லைன் வணிக நிறுவனங்கள் இயங்க அனுமதி. அத்தியாவசிய பொருட்களை மட்டும் விநியோகிக்கலாம்.
  • உணவு, மருந்துகளை இணைய வர்த்தக நிறுவனங்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம். வீடுகளுக்கே சென்று அத்தியாவசிய பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

எதெற்கெல்லாம் தடை விதிப்பு :

  • 5 பேருக்கு மேல் பொது இடங்களில் கூட கூடாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ. 500 அபராதம் வசூலிக்கலாம்.
  • தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியில் நடமாடினால் கடும் நடவடிக்கை
  • மே 3ம் தேதி வரை திரையரங்குகள், வணிக வளாகங்கள், அரசியல் நிகழ்வுகள், வழிபாட்டுத்தலங்கள், பொதுக்கூட்டங்களுக்கு தடை தொடரும்.
  • அனைத்து கல்வி நிலையங்கள், பொது போக்குவரத்து சேவைகள் இயங்க தடை .
  • கல்வி நிலையங்கள், பயிற்சி மையங்கள், மால்கள், வணிக வளாகங்களுக்கு தடை தொடரும்
  • நாடு முழுவதும் பொதுஇடங்களில் மக்கள் மாஸ்க் அணிவது கட்டாயம்
  • கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகள், பாதிப்பு உள்ளவர்கள் வசித்ததற்காக முடக்கப்பட்ட பகுதிகளுக்கு தளர்வு பொருந்தாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற https://www.seithisolai.com/வுடன் இணைந்திருங்கள்!

Categories

Tech |