கடலூர் ஆலப்பாக்கத்தில் போதைக்காக மெத்தனால் குடித்த இருவர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1204 ஆக உயர்ந்துள்ளது. இதில் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சிறார்கள் என 33 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏப்., 14ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மே 3ம் தேதி வரை தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படமாட்டாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதனால் மது கிடைக்காததால் கள்ளச்சாராயம் காய்ச்சுவது, மது கடைகளை கொள்ளையடிப்பது போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இந்த நிலையில் கடலூர் அருகே ஆலப்பாக்கத்தில் போதைக்காக மெத்தனால் தண்ணீர் கலந்து குடித்த இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று ஒருவர் உயிரிழந்த நிலையில் இன்று மேலும் 2 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ள சம்பவர் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று சந்திரகாஸ் என்பவர் போதைக்காக மெத்தனால் குடித்ததால் உயிரிழந்தார். இந்த நிலையில் இன்று மாயக்கிருஷ்ணன், சுந்தர் ராஜன், எழில்வேந்தன் ஆகியோர் போதைக்காக மெத்தனாலில் தண்ணீர் கலந்து குடித்துள்ளனர்.
இதையடுத்து அவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி மாயக்கிருஷ்ணன், சுந்தர் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். எழில்வேந்தன் என்பவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சிகிச்சை பெற்று வருபவருக்கு கண்பார்வை பறிபோன பரிதாபம் ஏற்பட்டுள்ளது.