காஞ்சிபுரத்தில் 51 வார்டுகளில் உள்ள தெருக்களை கம்பு கொண்டு தடுப்பு சுவர் கட்டி மக்கள் வெளிவருவதை மாவட்ட நிர்வாகம் தடுத்து வருகிறது.
கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள்ளேயே முடங்கி இருக்கின்றன. இந்த சூழ்நிலையில் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மட்டுமே மக்கள் வெளியே வர வேண்டும் என்று தமிழக அரசு பல்வேறு முறை வலியுறுத்தி வருகின்ற போதிலும் இளைஞர்கள் தேவையில்லாமல் வெளியே சுற்றித் திரிவதை நாம் பார்க்கத்தான் செய்கிறோம்.
அந்த வகையில், காஞ்சிபுரத்தில் தேவையில்லாமல் மக்கள் வெளியே வருவதை தடுப்பதற்காக 51 வார்டுகளில் பெரும்பாலான தெருக்களில் கம்பு கொண்டு தடுப்பு அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே வெளியில் வர குறுகலான ஒரு வழி பாதை அமைக்கப்பட்டுள்ளது. சரியான காரணம் இல்லாமல் வெளியே வரவே முடியாது. காரணம் இல்லையெனில் தடுப்பு இருக்கும் பகுதியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி வீட்டிற்கு அனுப்பப்படுவர். காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தின் இந்த செயலுக்கு அப்பகுதியில் பாராட்டுகள் குவிந்து வருகின்றது.