Categories
அரசியல்

‘மாஸ்க்’ போடலையா? ரூ.100 அபராதம்… லைசென்ஸ் ரத்து… சென்னை மாநகராட்சி ஆணையர்!

சென்னையில் பொதுமக்கள் யாராவது முகக்கவசம் அணியாமல் நடந்து சென்றால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அதிரடியாக அறிவித்துள்ளார். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவிவரும் நிலையில், தமிழகத்தில் அசுர வேகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே சென்ற நிலையில், நேற்று 31 பேருக்கு மட்டும் பாதிப்பு ஏற்பட்டதால் மக்களுக்கு ஆறுதல் அளிக்க கூடிய செய்தியாக இருக்கிறது.

இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,204 ஆக உயர்ந்தது. இதில் 81 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில்  அதிகபட்சமாக சென்னையில் 211 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்த நிலையில், “சென்னையில் பொதுமக்கள் யாராவது முகக்கவசம் அணியாமல் நடந்து சென்றால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும். மாஸ்க் அணியாமல் வெளியே வருபவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படும். மேலும் ஓட்டுநர் உரிமம் 6 மாதங்களுக்கு இடைநிறுத்தம் செய்யப்படும்” என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அதிரடியாக அறிவித்துள்ளார்.

இதனிடையே கொரோனாவை  கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவை மே 3 ஆம் தேதிவரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |