நாடாளுமன்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெற்றுள்ளது . இதற்க்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இன்று திமுக தலைவர் தலைமையில் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்ட செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர் மற்றும் நாகை நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தலைமையில் மூத்த தலைவர் நல்லகண்ணு ஆகியோர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது . இதற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு கூறுகையில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் சுப்பராயனும் , நாகை பாராளுமன்ற தொகுதியில் செல்வராசும் வேட்பாளர்களாக போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே 3 முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டவர் எம் செல்வராசு என்பது குறிப்பிடத்தக்கது