சென்னையில் மாஸ்க் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வரும் நபர்களின் ஓட்டுநர் உரிமம் 6 மாத காலத்திற்கு ரத்து செய்யப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னையில் மாஸ்க் அணியாமல் வெளியே நடந்து வருபவர்களுக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அதிரடி அறிவிப்பை ஒன்று வெளியிட்டுள்ளது. மேலும் மாஸ்க் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வெளியே வந்தால் அபராதம் விதிப்பதோடு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு,
ஆறு மாத காலத்திற்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று எச்சரித்துள்ளது. ஆகவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் வெளியில் சென்றால் மாஸ்க் உடன் செல்ல வேண்டும் இது மக்களை தண்டிப்பதற்கான நடவடிக்கை அல்ல மக்களை காப்பதற்காகவே இம்மாதிரியான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.