மகாராஷ்டிராவில் மேலும் 117 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 2,801 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் மேலும் 19 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 22வது நாளாக ஊரடங்கு அமலில் உள்ளது. இன்று காலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,076 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,815- லிருந்து 11,439ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழந்தோர் எண்ணிக்கை 377ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 1,306ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் அதிகம் கொரோனா தொற்று உள்ள மாநிலங்கள் மகாராஷ்ட்ரா, டெல்லி மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் ஆகும். இந்த நிலையில், மகாராஷ்டிராவில் மேலும் 117 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்குகிறது. அதேபோல, மொத்த உயிரிழப்புகள் எண்ணிக்கை 170 ஆக அதிகரித்துள்ளது.