தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 2 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா வைரஸின் தாக்கம் தமிழகத்திலும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகின்றது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு நாளும் கொரோனாவின் தாக்கம் தமிழக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்படும்.
அந்த வகையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறும்போது தமிழகத்தில் மேலும் 38 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1242ஆக அதிகரித்துள்ளது.
மேலும் இன்று 2 பேர் பலி ஆகி உள்ளனர் என்று தெரிவித்த சுகாதாரத்துறை அமைச்சர் இன்று 2 டெத் 45 வயது அரசு ஸ்டான்லி மருத்துவமனை 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரும் , தனியார் மருத்துவமனையில் 59 வயது மதிக்கத்தக்க நபரும் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார். இதனால் கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.