Categories
லைப் ஸ்டைல்

மனம் வீசும் மல்லிகை பூ… அதிகம் பூப்பதற்கு சில டிப்ஸ்..!!

மல்லிகை பூ செடியில் அதிக பூக்கள் பூப்பதற்கு செய்ய வேண்டியவை பற்றி இந்த குறிப்பில் பார்ப்போம்.

மல்லிகை என்றாலே விரும்பாதவர்கள் எவர்தான் இருக்க முடியும். அந்த வகையில் அதிகம் பேர் வீட்டில் அல்லது மாடிகளில் ஆசைப்பட்டு வளர்ப்பார்கள். அப்பொழுது பூ செடிகளுக்கு ஒழுங்கான பராமரிப்பு முறை இருந்தால் மட்டுமே செடிகள் அதிக பூக்கள் பூக்க ஆரம்பித்து விடும். அந்த  வகையில் பூ செடிகள் முதல் இடத்தை பெற்றுள்ளது.  ஆம் வீட்டில் தோட்டம் வைக்கவேண்டும்.  என்று நினைப்பவர்கள் அதற்கான பராமரிப்பு முறைகளை பின்பற்ற மாட்டார்கள்.

குறிப்பு 1: 

மல்லி செடி பொறுத்தவரை இரண்டு வகை உள்ளது ஒன்று செடி வகை மற்றொன்று கொடி வகை. இவற்றில் நாம் கொடி வகை மல்லிகை செடிகளை வாங்குங்கள் நன்றாக பூக்கள் பூக்கும். அதேபோல் தண்டு நன்கு தடிமனாக இருப்பது போல் மற்றும் கிளைகள் இரண்டு மூன்று இருப்பது போல் பார்த்து வாங்குங்கள்.

 

குறிப்பு 2 : 

மாடித் தோட்டத்தில் மல்லிகை பூ செடி வைப்பவர்கள் 50 லிட்டர் வாட்டர் கேனில் வைத்து வளர்க்கலாம். இருப்பினும் மணல் கலவையை தயார் செய்து செடிகளை நட வேண்டும். அப்போது தான் செடியில் பூக்கள் நன்றாக பூக்கும்.

மண் கலவை செய்வது: குறிப்பு 3 :

மல்லிகை செடிக்கு செம்மண் மிகவும் சிறந்தது, செம்மண் இல்லை என்றால் உங்கள் பகுதியில் என்ன தோட்டமண் கிடைக்கிறதோ அவற்றில் ஒரு பங்கு எடுத்துக்கொள்ளுங்கள், கோகோ பெட் ஒரு பங்கு, வேப்பம் பிண்ணாக்கு 100 கிராம், தொழு உரம் என்று சொல்ல கூடிய நன்கு மக்கிய மாட்டு சாணம் ஒரு பங்கு, உயர் உரங்கள் பயன்படுத்த வேண்டும் என்றால் ட்ரைக்கோ டெர்மா விரிடி ஒரு ஸ்பூன் எடுத்துக்கொள்ளுங்கள்.

இவை அனைத்தையும் கொண்டு கலவை மண் தயார் செய்து கொள்ளுங்கள். இவ்வாறு தயார் செய்த மண்ணில் மல்லிகை பூ செடியை வளர்த்தால் செடி நன்கு வளர்ந்து வருடம் முழுவதும் பூக்கள் நன்றாக பூத்து குலுங்கும்.

குறிப்பு 4 :

மல்லி பூ செடி பொறுத்தவரை ஆறு மாதத்திற்கு ஓருமுறை களை எடுக்க வேண்டும்.  செடிகளின் பக்கத்தில் வேறு ஏதாவது செடி வளர்ந்து இருந்தால் அந்த செடிகளை பிடிங்கி எரிந்து விடுங்கள். மேல் மண் கொத்திவிட வேண்டும். இவ்வாறு செய்வதினால் செடி நன்றாக வளர்ந்து பூக்கள் நிறைய  பூத்து கொண்டே இருக்கும்.

 

குறிப்பு 5 :

சில நேரங்களில் மல்லிகை பூ செடியின் இலை மஞ்சளாக மாறும், காரணம் நைட்ரஜன் சத்து குறைவாக இருக்கும். அந்த சமயத்தில் செடிகளுக்கு பிண்ணாக்கு கரைசல் அல்லது மீன் அமிலம் போன்றவற்றை சேருங்கள்.

குறிப்பு 6:

மல்லி பூ செடிக்கு வாரம் ஒரு முறை அல்லது 10 நாட்களுக்கு ஒரு முறை அனைத்து வகை உரங்களில் ஏதேனும் ஒன்றினை செடிகளுக்கு கொடுக்கலாம். அதாவது பிண்ணாக்கு கரைசல், காய்கறி கழிவுகள், மீன் அமினோஅமிலம், பஞ்சகாவிய, அமிர்தக்கரைசல், டீத்தூள், முட்டை ஓடு, வாழைப்பழ தோல் போன்று அனைத்து வகை இயற்கை உரங்களையும் மல்லிகை செடிக்கு பயன்படுத்தலாம்.

குறிப்பு 7: 

மல்லி செடிக்கு வெயில் காலங்களில் காலை அல்லது மாலை வேளையில் செடிகளுக்கு தண்ணீர் விடவேண்டும். குளிர் காலம் மற்றும் மழை காலங்களில் மண்ணின் ஈரப்பதம் பொறுத்து தண்ணீர் தெளிக்க ஊற்ற வேண்டும்.

குறிப்பு 8:

மல்லி பூ செடியினை தோட்டத்தில் வைத்து வளர்ப்பவர்களாக இருந்தாலும் சரி, மாடி தோட்டத்தில் வைத்து வளர்ப்பவர்களாக இருந்தாலும் சரி வருடத்திற்கு இரண்டு முறை, செடியின் மேல் மண் பகுதியினை 2 அல்லது 3 இஞ் அளவு கொத்தி விட்டு நன்கு மக்கிய ஆட்டு சாண எரு அல்லது மாட்டு சாண எருவினை 4 அல்லது 5 கைப்பிடி அளவு போட்டு மேல் மண் அணைக்க வேண்டும். இவ்வாறு ஜூன் மாதம் ஒரு முறையும், டிசம்பர் மாதம் ஒரு முறையும் செய்து வர வேண்டும். இவ்வாறு செய்வதினால் செடிகளுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும், இதனால் மல்லிகை பூ செடி என்றும் பூக்கள் பூத்து கொண்டே இருக்கும்.

 

Categories

Tech |