மேஷம் ராசி அன்பர்களே …! இன்றைய நாள் உங்களுக்கு யோகமான நாளாகவே இருக்கும். உள்ளம் மகிழும் தகவல் இல்லம் தேடி வரக்கூடும். வெளியூர் பயணத்தால் ஆதாயம் கிடைக்கும். உடல்நலம் சீராக இருக்கும். வருமானம் திருப்திகரமாகவே இருக்கும். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் வியாபார போட்டிகள் குறையும். பணவரவு தாராளமாக இருப்பதால் சேமிக்கக் கூடிய எண்ணத்தை நீங்கள் வளர்த்துக் கொள்வீர்கள்.
புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். உறவினர்களின் வருகை இருக்கும். குடும்ப செலவு மட்டும் கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். பயணங்கள் செல்வதாக இருந்தால் ரொம்ப கவனமாக செல்லுங்கள். அடுத்தவர்களுக்காக பொறுப்புகளை ஏற்கும் பொழுது ஒரு முறைக்கு பல முறை யோசித்து முடிவுகளை எடுங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று குருபகவான் வழிபாட்டையும் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்துமே நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்