கடகம் ராசி அன்பர்களே …! இன்று வருமானம் வரும் வழியை கண்டு கொள்ளும் நாளாகவே இருக்கும். தடைப்பட்ட ஒப்பந்தங்கள் தானாகவே நடைபெறுவதை கண்டு ஆச்சரியப்படுவீர்கள். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழும் கூடிய வாய்ப்புகள் உண்டாகும். இன்று உங்களது செயல்களை மற்றவர்கள் பாராட்டுவார்கள். மதிப்பும் மரியாதையும் அந்தஸ்தும் உங்களுக்கு அதிகரிக்கும். புதிய நபரிடமிருந்து எப்பொழுதும் கொஞ்சம் கவனமாகவே இருங்கள்.
வாழ்க்கையில் சில நல்ல திருப்பங்களை நீங்கள் அடையக்கூடும். சிற்றின்பம் கிடைக்கும். மனதில் தைரியமும் புதிய உற்சாகமும் பிறக்கும். புதிய முயற்சிகளில் இழுபறியான நிலையே காணப்படும். ஆனால் கொடுக்கல் வாங்கலில் மட்டும் ரொம்ப கவனமாக தான் இருக்க வேண்டும். யாருக்கும் வாக்குறுதியும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். அதை நீங்கள் கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள்.
இன்று முக்கியமான பணி நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டால் காரியங்கள் அனைத்துமே ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் இளம் சிவப்பு நிறம்