Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசி…… செய்யும் செயலில் தாமதம் ஏற்படும்….மற்றவரை நம்ப வேண்டாம்….!!!

கும்பம் ராசி நண்பர்களே…. இன்று இல்லத்தில் இறைவழிபாட்டால் கூத்துகளும் கூடும்  நாளாக இருக்கும்.புதிய முயற்சியில் வெற்றி கிட்டும். தக்க சமயத்தில் பிறருக்கு உதவுவதால் பலருடைய அன்பு பெறுவீர்கள். பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகி நிம்மதி கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் கவனமுடன் செய்வது நல்லது.

பயன்தராத முயற்சிகளைக் கை விடுவது ரொம்ப நன்மையை கொடுக்கும்.விண் அலைச்சல் உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கொடுத்த பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்படும். அடுத்தவர்  செய்கை கோபத்தை தூண்டுவதாக இருக்கும் கவனமுடன்  இருக்கட்டும். குடும்பம் தொடர்பான காரியங்கள் பொறுப்பாக செய்வது நல்லது .

அடுத்தவரை நம்பி எதையும் விடாமல் நேரடியாக நீங்கள் செய்வதுதான் சிறப்பு.கூடுமானவரை காரியத்தை அவரிடம் ஒப்படைக்க வேண்டாம் குடும்பத்தில் உள்ள ரகசியங்களை கண்டிப்பாக பாதுகாக்க வேண்டும். காதலர்கள் எந்தவித காரணத்திற்காகவும் வாக்குவாதத்தில் மட்டும் ஈடுபட வேண்டாம்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கும் அதுமட்டுமில்லாமல் இன்று குருபகவான் வழிபாடும் சித்தர்கள் வழிபாட்டையும் மேற்கொண்டால் காரியங்கள் அனைத்துமே நல்லபடியாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு

அதிஷ்ட எண்கள் : 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள்

Categories

Tech |