சிம்மம் ராசி அன்பர்களே …! இன்று தொட்ட காரியம் துளிர்விடும் நாளாகவே இருக்கும். தொல்லை தந்தவர்கள் விலகிச் செல்வார்கள் பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி நல்ல பலனை கொடுக்கும். பூர்வீக சொத்துக்களில் ஏற்பட்ட பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவிற்கு வரும். இன்று எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கும். வெளியூர் வெளிநாடு பயணம் திட்டமிட்டபடி செய்வதற்கான சூழலும் அதற்கு ஏற்ற நிலைமையும் சரியாகும்.
எதைப்பற்றியும் கவலைப்படாமல் மட்டும் இருங்கள். அது போதும் அரசாங்கம் தொடர்பான வேலைகள் தடையின்றி நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை காணப்படும். உறவினர்களுடன் சுமுகமான போக்கு ஏற்படும் அவர்களால் நன்மையும் உண்டாகும். நீண்டதூர தகவல்கள் நல்ல தகவல்களாகவே இருக்கும். பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.
இன்று எந்த ஒரு விஷயத்தையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று மட்டும் செய்ய வேண்டாம் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெளிர் பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெளிர் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டால் காரியங்கள் அனைத்துமே ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்ட திசை : -தெற்கு
அதிர்ஷ்ட எண் : –3 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்