கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருப்பவர்களை குணப்படுத்த உரிய தடுப்பு மருந்து இல்லாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன.
சீனாவில் முதலில் தொடங்கிய கொரோனா உலகம் முழுவதும் அதன் தாக்கத்தை அதிகரித்து, மக்களின் உயிரை காவு வாங்கி வருகிறது. லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு, பலியாகியுள்ளார். கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீள முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்க முடியாததால், தினமும் மரணத்தின் பிடியில் மக்கள் சிக்கியுள்ளனர். கொரோனா பரவாமல் இருக்கவும், அதனை கட்டுப்படுத்தவும் சமூக விலகலே முக்கியமானது என்று உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றது.
இதனால் உலக நாடுகள் அனைத்தும் சமூக விலகலுக்கு எதுவாக ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து, மக்கள் சமூக விலகலை கடைப்பிடிக்க வழிவகை செய்து வருகின்றன. இந்த நிலையில்தான் வருகின்ற 2022ஆம் ஆண்டு வரை நாம் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டியது அவசியம் என்று நிபுணர்கள் தெரிவித்து மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பேசிய ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் தொற்று நோய் பிரிவு பேராசிரியர் மார்க்லிப்சிட்ச், கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தி உள்ளது. ஆனால் ஒரு முறை ஊரடங்கு போடுவது கொரோனாவை கட்டுப்படுத்த போதுமானதாக இருக்காது.
கொரோனா வைரஸின் தாக்கம் இரண்டாம் நிலைக்கு செல்லும்போது அசுரத்தனமாக பரவும். நோய் தொற்று உள்ளவர்களிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுவது ஒருமுறை. நோய் எளிதில் பாதிப்பை உண்டாக்குவது பரவுவது இன்னொருமுறை. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் அந்த அவரை எளிதில் தாக்குவது ஒரு வகை. இப்படி மக்களை ஆக்கிரமித்துள்ளன கொரோனா வைரசை முழுவதுமாக கட்டுப்படுத்த நாம் வந்து தடுப்பு மருந்து கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் உள்ளது.
இல்லையென்றால் சிறப்பான சிகிச்சையை கொடுக்க வேண்டும் அல்லது 2022ஆம் ஆண்டு வரை உலக நாடுகளில் உள்ள மக்கள் அனைவரும் சமூக விலகலை பின்பற்றுவது அவசியம். கொரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதற்கு நம்மிடையே இப்போது புதிய சிகிச்சை முறைகள் இல்லை. இதுக்கு தடுப்புமருந்து வரை இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. போதுமான சிகிச்சை பிரிவுகளும் இல்லாமல் பல நாடுகள் திணறுகின்றன. எனவே கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து விடுபட சமூக விலகலை கடைப்பிடிப்பதே சிறந்த வழி. இதனால் நாம் 2022 வரை சமூக விலகலை கடைபிடிக்க வேண்டிய தேவை ஏற்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.