திருச்சியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 32 பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதே போல் பூரண குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கையும் இந்தியா முழுவதும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக தென் மாநிலங்களான கேரளா தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்விரைவாக குணம் அடைந்து வருவது ஒரு நல்ல செய்தியாக பார்க்கப்படுகிறது.
அந்த வகையில், திருச்சி அரசு மருத்துவமனையில் இன்று ஒரே நாளில் 32 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இவர்களை திருச்சி மாவட்ட ஆட்சியர் உட்பட மருத்துவ ஊழியர்கள் அனைவரும் கைதட்டி வழியனுப்பி வைத்தனர். இந்த 32 நபர்களில் 67 வயது முதியவர் மற்றும் ஒரு வயது குழந்தை குணமடைந்து மேலும் கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.