கைகளை கழுவ சனிடைசர் இல்லாத காரணத்தினால் ஆல்கஹாலை பயன்படுத்த ஜப்பான் சுகாதாரத்துறை அமைச்சகம் முடிவெடுத்துள்ளது.
உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா தொற்றை தடுக்க அடிக்கடி கைகளை சனிடைசர் மூலம் கழுவ வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருந்தது. இதனால் அதிக நாடுகளில் சனிடைசர்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சனிடைசர் எனப்படும் கிருமிநாசினியில் 70% முதல் 80% வரை ஆல்கஹால் சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஜப்பானிலும் சனிடைசர் எனும் கிருமிநாசினி தட்டுப்பாடு ஏற்பட்ட காரணத்தினால் அதற்கு பதிலாக ஆல்கஹாலை பயன்படுத்தலாம் என ஜப்பான் சுகாதாரத்துறை அமைச்சகம் முடிவெடுத்துள்ளது. அதனைத்தொடர்ந்து மதுபானங்களில் ஒருவகையான வோட்காவை கைகழுவ கிருமிநாசினியாக பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளனர்.
ஆல்கஹாலை நேரடியாக பயன்படுத்துவதனால் அதிக வீரியம் ஏற்படும் எனவும் அதனை நேரடியாக பயன்படுத்துவதைவிட தண்ணீரில் கலந்து கைகளை சுத்தம் செய்ய பயன்படுத்துவது நல்லது என ஜப்பான் அரசு அறிவுறுத்தியுள்ளது.