வவ்வால்களுக்கு கொரோனா தொற்று பரவக் கூடாது என்று சொல்லிய நிலையில் தமிழகம் உட்பட 4 மாநிலங்களில் வவ்வால்களுக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
உலக நாடுகளுக்கு பெருமளவில் பரவி பல உயிர்களை கொன்ற கொரோனாவால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உலகில் மூன்று பங்கு மக்களை வீடுகளுக்குள் இருக்கும் படியான நிலை ஏற்பட்டுள்ளது.. இதனிடையே அறிவியல் நிபுணர்கள் வவ்வால்களுக்கு மனிதர்களிடமிருந்து கொரோனா தொற்று ஏற்படுவது அபூர்வமே ஆனால் அவ்வாறு பரவி விட்டால் அது பேராபத்தை ஏற்படுத்தும் என்று கூறியிருந்தனர்.
அதோடு உயிரியல் பிரிவில் இருப்பவர்களும் வனத்துறை தன்னார்வலர்களும் தொற்று பரவிவரும் இந்த காலகட்டத்தில் வவ்வால்களை கையாள வேண்டாம் என எச்சரித்திருந்தனர். இந்நிலையில் புதுச்சேரி, தமிழ்நாடு, இமாச்சலப் பிரதேசம், கேரளா என நான்கு மாநிலங்களில் இரண்டு வகை வவ்வால்களில் கொரோனா வைரஸ் காணப்படுகிறது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இது பற்றிய தகவல்கள் இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளிவந்து மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து ஆய்வு நடத்திய பூனே தேசிய வைராலஜி நிறுவனத்தின் விஞ்ஞானி பிரக்யா டி யாதவ் கூறியபொழுது “பல மாநிலங்களைச் சேர்ந்த பிடெரோபஸ் வவ்வால் மற்றும் ரூசெட்டஸ் வவ்வால் வகையினை ஆராய்ந்தோம். அவற்றின் மலக்குடல் மற்றும் தொண்டை மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வில் இமாச்சல் பிரதேசம், புதுச்சேரி, கேரளா, தமிழ்நாடு என நான்கு மாநிலங்களில் காணப்படும் வவ்வால்களில் “வவ்வால் கொரோனா” தொற்று இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து அதனை உறுதி செய்ய ஆர்.டி.-பி.சி.ஆர் சோதனையும் மேற்கொண்டோம். அதேசமயம் தெலுங்கானா. சண்டிகர், கர்நாடகா, பஞ்சாப், ஒடிசா, குஜராத் போன்ற மாநிலங்களில் காணப்படுகிற வவ்வால்களுக்கு வைரஸ் தோற்று இல்லை.
தமிழகம் உட்பட நான்கு மாநிலங்களில் இருக்கும் வவ்வால் கொரோனாவிற்கும் மனிதர்களுக்கு பரவி வரும் கொரோனா தொற்றிற்க்கும் எந்த தொடர்பும் இல்லை. எங்களது ஆய்வில் இரண்டு வகையான வவ்வால்களில் வவ்வால் கொரோனாவை கண்டுபிடிக்க முடிந்தது. தொற்று நோயுடன் வரும் வைரஸ்களை அடையாளம் காண தீவிர கண்காணிப்பு அவசியம்” எனவும் கூறினார்.