சீனாவில் இருந்து அனுப்பிவைக்கப்பட்ட 6.5 லட்சம் கொரோன பரிசோதனை ரேபிட் டெஸ்ட் கருவிகள் இந்தியா வந்தடைந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,242 ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் தொண்டையில் இருந்து திசுக்களை எடுத்து கொரோனா பரிசோதையானது செய்யப்பட்டு வருகிறது. இதற்கு ஐசிஎம்ஆர் பரிந்துரைத்த உபகரணங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
இதற்கு சுமார் 6 மணி நேரம் தேவைப்படுவதால் ஒரு நாளுக்கு குறைந்த அளவிலான நபர்களையே சோதனை செய்ய முடிகிறது. மேலும் நேர விரயம் ஆகிறது. இதனால் சீனாவில் பின்பற்றிய முறையை பயன்படுத்தி கொரோனா பரிசோதை செய்ய மத்திய அரசு திட்டமிட்டது. அதன்படி ஏப்., 12ம் தேதி முதல் ரேபிட் டெஸ்ட் தொடங்கும் என அறிவித்திருந்த நிலையில் 4 நாள் தாமதம் ஆகலாம் என ஐ.சி.எம்.ஆர் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், சீனாவில் இருந்து அனுப்பிவைக்கப்பட்ட 6.5 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் டெல்லி வந்தடைந்துள்ளது. சுங்கத்துறை அனுமதி அளித்த பின்னர் அந்த கருவிகள் மாநில வாரியாக பிரித்து வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த ரேபிட் டெஸ்ட் கருவிகள் மூலம் ஒரு நாளில் லட்சக்கணக்கானோருக்கு கொரோனா பரிசோதனை செய்ய முடியும்,30 நிமிடங்களில் முடிவு தெரிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.