தாய்லாந்து நாட்டின் தேசிய நெடுஞ்சாலையில் 50க்கும் மேற்பட்ட யானைகள் கடந்து சென்றதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக் அருகே இருக்கும் தேசிய நெடுஞ்சாலை ஒன்று வனப்பகுதிக்குள் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு அடிக்கடி வனவிலங்குகள் கடந்து செல்லும். ஆகவே இந்த பகுதியில் வாகனங்களை மெதுவாக இயக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் யானை கூட்டம் ஒன்றை கண்காணித்து வந்த வனத்துறையினர், அந்த யானை கூட்டம் சாலையின் குறுக்கே வரும் என்பதைக் கணித்து வைத்திருந்தனர்..
இதையடுத்து நேற்று முன்தினம் அந்த யானைக்கூட்டம் சாலையை கடக்க இருந்ததை அடுத்து வனத்துறையினர் சாலையை கடக்க தடை விதித்தனர். அதைத்தொடர்ந்து 40 வினாடிகளில் 50க்கும் மேற்பட்ட யானைகள் குட்டிகளுடன் சாலையை கடந்து சென்றன.. இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
🇹🇭 #Thai netizen shared a video of a big herd of wild #elephants crossing road in Chachoengsao province, east of #Bangkok, Thailand. The video showed the road was blocked by many sizes of elephants which properly crossed the road. pic.twitter.com/4QeQKQsRJh
— CCTV Asia Pacific (@CCTVAsiaPacific) April 12, 2020