கொரோனா பரவலை தடுக்க அதிக அளவு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது . முன்னதாக 21 நாட்கள் விதிக்கப்பட்டு இருந்த ஊரடங்கை மேலும் 19 நாட்கள் நீட்டித்து மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என மத்திய அரசு அறிவித்தது. இதை தொடர்ந்து இன்று காணொளி மூலம் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சித் மூத்த தலைவர் ராகுல் காந்தி பல்வேறு குற்றசாட்டை முன்வைத்தார்.
அதில், கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு மட்டுமே தீர்வல்ல. ஊரடங்கு முடிந்த பிறகு அவற்றின் பரவல் அதிகரிக்கத்தான் போகிறது. ஊரடங்கு கொரோனா பரவியதை தாமதப்படுத்தியதே தவிர அதை தடுத்து நிறுத்தவில்லை. கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும். போதுமான அளவு பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை. கொரோனா அதிகம் பாதித்துள்ள மாநிலங்களை மாவட்ட அளவிலான கண்டறிந்து பரிசோதனை தீவிரப்படுத்த வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தினார்.