Categories
உலக செய்திகள்

ஏங்க..! இப்படி பண்ணுறீங்க – அமெரிக்கா முடிவால் அரண்டு போன சீனா …!!

அமெரிக்க அதிபர் உலக சுகாதார அமைப்பிற்கு வழங்கும் நிதியை நிறுத்த உத்தரவிட்டது கவலையை ஏற்படுத்தியுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது

உலக சுகாதார மையம் தனது கடமையில் இருந்து விலகி சீனாவிற்கு ஆதரவாக செயல்படுகிறது என அதற்கு அமெரிக்கா வழங்கி வந்த நிதியை நிறுத்த டிரம்ப் உத்தரவிட்டது கவலையை அளித்துள்ளது என சீனா தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியதாவது, “உலக சுகாதார மையத்திற்கு அமெரிக்கா வழங்கி வந்த நிதியை நிறுத்தியுள்ளது அதிக கவலை கொடுக்கிறது. இது ஒரு இக்கட்டான தருணம், இந்த தருணத்தில் அமெரிக்க அதிபரின் இம்முடிவு உலக சுகாதார மையத்தின் செயல்களை பலவீனப்படுத்த வாய்ப்புகள் அதிகம்.

இதனால் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு குறைவதற்கான வாய்ப்புகளும் உள்ளது” என தெரிவித்துள்ளனர். இதனிடையே கொரோனா தொற்று மனிதர்களிடமிருந்து மற்ற மனிதர்களுக்கு பரவாது என அறிவித்த உலக சுகாதார மையம், ஜனவரி மாதத்திற்குப் பின்னரே மனிதர்கள் மூலம் மனிதர்களுக்கு தொற்று பரவும் என தெரிவித்துள்ளது. தொடக்கத்திலேயே சீனாவில் முறையான ஆய்வு செய்து உரிய தகவலை அளித்திருந்தால் அமெரிக்காவில் இவ்வளவு உயிரிழப்பு ஏற்படாமல் தடுத்திருக்கலாம் என அமெரிக்க அதிபர் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |