தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் விஜயகாந்த சந்தித்துப் பேசினார் .
சென்னை பசுமை வழி சாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் அமைச்சர் தங்கமணி , துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மாற்றும் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் ஜிகே வாசனை வரவேற்றனர் . முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஜி கே வாசன் இடையேயான சந்திப்பு அரை மணி நேரம் நீடித்தது அதிமுக கூட்டணியில் இணைந்த பின்னர் நடைபெற்ற மரியாதை நிமித்தமான சந்திப்பு இதுவாகும் .
பின்னர் அங்கிருந்து புறப்பட்ட ஜி.கே வாசன் சென்னை சாலிகிராமத்தில் சென்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார் பின்னர் ஜி கே வாசன் மரியாதை நிமித்தமாகவும் கூட்டணியின் முக்கிய தலைவரின் என்கின்ற முறையும் விஜயகாந்தை சந்திக்க வந்ததாக தெரிவித்தார் . மக்களை சந்தித்து மக்களுடைய நம்பிக்கையைப் பெற்று வெற்றிக் கூட்டணியாக இந்த கூட்டணி அமையும் என்று GK வாசன் தெரிவித்தார்.