Categories
சென்னை மாநில செய்திகள்

“DOOR டெலிவரி” நீங்க வர வேண்டாம்….. நாங்களே வாரோம்….. அதிரடி நடவடிக்கை…!!

சென்னை மக்களின் வீட்டிற்கே சென்று காய்கறிகளை டோர் லெலிவரி செய்யும் வசதியை கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகம் நடைமுறைப்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே தங்களது வீடுகளை விட்டு வெளியே வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீட்டு அருகில் இருக்கக்கூடிய மளிகைக் கடைகளிலே காய்கறிகளை வாங்கி விட்டு வீட்டிற்கு செல்ல, ஒரு சிலரோ அருகில் உள்ள மளிகை கடைகளில் விலை அதிகம் இருப்பதன் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்று ஒரு வாரத்திற்குத் தேவையான காய்கறிகளை வாங்கி வந்து வைத்துக் கொள்கின்றனர்.

இதனால் மார்க்கெட்டில் ஊட்டம் கூடுவதுடன் மக்களும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதில் மிக அஜாக்கிரதையாக இருப்பதாக கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அவர்கள் கூறுகையில்,

பொதுமக்களிடம் குறித்த விழிப்புணர்வு பெரிய அளவில் இல்லை சமூக இடைவெளியை கடைபிடிப்பதில் அவர்கள் கோளாறாக நடந்து கொள்கின்றனர். ஆகவே கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகம் ஒரு குடும்பத்திற்கு 5 அல்லது 6 நாட்களுக்கு தேவையான சுமார் பதினைந்து வகை காய்கறிகளை சுவிகி சோமாட்டோ உள்ளிட்ட ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள் மூலம் பார்சல் செய்து வீட்டிற்கே நேரடியாக சென்று கொடுக்கின்றனர்.

அதேபோல வாகனங்கள் மூலம் சென்னையில் உள்ள ஏரியாக்களில் நடமாடும் காய்கறி வண்டி என்று கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகம் காய்கறிகளை விற்பனை செய்து வருகிறது.  மேலும் 7305050541,7305050542, 7305050543,7305050544 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொண்டு காய்கறிகளை ஆல்டர் செய்பவர்களுக்கும், www.cmdachennai.gov.in என்ற இணையதளம் மூலம் ஆர்டர் செய்பவர்களுக்கும் வீட்டிற்கே சென்று விநியோகம் செய்யப்படுகிறது. ஆகவே கோயம்பேடு மார்கெட் நிர்வாகத்தின் இந்த புதிய முயற்சியை மக்கள் ஊக்குவிப்பதுடன் வீட்டை விட்டு வெளியே வராமல் பாதுகாப்பாக இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |