Categories
உலக செய்திகள்

முக்கியமான 22,000 பேருக்கு கொரோனா – வெளியான அதிர்ச்சி தகவல் …!!

உலகம் முழுவதிலும் 22000 மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

சீனாவின் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட உயிர்களை எடுத்துள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றை தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தவும் தொடர்ந்து  முயற்சித்து வரும் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

அத்தகவலின் அடிப்படையில் சுமார் 52 நாடுகளில் மொத்தம் 22073 சுகாதார ஊழியர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பணிபுரியும் இடத்தில் இருந்தோ அல்லது பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்தோ கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.  இதனிடையே சுகாதார ஊழியர்களுக்கு ஏற்கனவே பாதுகாப்பு உபகரணங்களை உலக சுகாதார அமைப்பின் சார்பாக உபயோகப்படுத்த பரிந்துரைக்கப்பட்டது.  சுகாதார ஊழியர்களின் பணி இடங்களிலும் அவர்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தனர்.

Categories

Tech |