தமிழகத்தில் கொரோனாவால் 15 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
தமிழகத்தில் வேகமாக பரவிவரும் நிலையில்கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் கொரோனவை தடுப்பது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் இருந்து கொண்டு காணொளி மூலம் மாவட்ட ஆட்சியர்களிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழகத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்று தெரிவித்தார். அதேபோல உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 180 பேர் குணமடைந்துள்ளனர் என்று முதல்வர் தெரிவித்தார்.