Categories
மாநில செய்திகள்

கொரோனா தொற்று எளிதாக பரவும் என்பதால் மிகப்பெரிய சவாலாக உள்ளது: முதல்வர் பழனிசாமி

கொரோனா தொற்று எளிதாக பரவும் என்பதால் மிகப்பெரிய சவாலாக உள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனாவை தடுப்பதற்கான அனைத்து மருத்துவ உபகரணங்களும் தமிழகத்தில் போதிய அளவு உள்ளன என கூறினார். மேலும் அவர் கூறியதாவது, ” நாள்தோறும் சராசரியாக 5,590 பேருக்கு பரிசோதனை செய்யும் வசதி தமிழகத்தில் உள்ளது. கொரோனா பரவல் தடுப்பு பணிகளுக்கான நடவடிக்கைகள் ஜனவரி மாதமே தமிழகத்தில் தொடங்கி விட்டது. ஜனவரி 23 முதலே விமான நிலையங்களில் கொரோனா அறிகுறி பிரிசோதனை நடத்தப்பட்டது.

7.3.2020 அன்று தமிழ்நாட்டில் முதன்முதலாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கொரோனா பரவலை முற்றாக தடுப்பதை இலக்காக கொண்டு தமிழ்நாடு அரசு செயல்படுகிறது. தமிழ்நாட்டில் 25 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனவால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,267 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 180 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் குணமடைந்த 62 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 97.9% குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் நடவடிக்கை காரணமாக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக” முதல்வர் கூறியுள்ளார். மேலும், மத்திய சுகாதாரத்துறையோடு இணைந்து கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

Categories

Tech |