தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் காணொலியில் ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாளுக்குநாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் உயர்ந்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய மாநில அரசு கொரோனாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதல்வர் காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதலமைச்சர் நடத்திய ஆலோசனை குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழகத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டு எண்ணிக்கை 1267 ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவித்தார்.
அதே போல தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 15 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தார் எண்ணிக்கை 180 ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவித்தார். நேற்று வரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 118 ஆக இருந்த எண்ணிக்கை இன்று ஒரே நாளில் 62 உயர்ந்து 180ஆக உள்ளது. முதல்வரின் இந்த தகவல் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.
கொரோனா பாதித்தால் மரணம் நிச்சயம் என உலகமே நடுங்கிக் கொண்டிருக்கும் நிலையில் ஒரே நாளில் 62 பேர் குணமடைந்துள்ளது கொரோனா பாதித்தவர்கள் முறையாக சிகிச்சை பெற்றால் குணமடைய முடியும் என்பதை தெளிவாக உணர்த்துகின்றது. பாதித்தவர்கள் அனைவருக்கும் மரணம் ஏற்படாது என்பதை உணர்த்தும் வகையில் தமிழகத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை உள்ளதால் தமிழக மக்கள் இதனை மகிழ்ச்சி செய்தியாக கொண்டாடி வருகின்றனர்.