தமிழகத்தில் உள்ள கல்லுரிகளுக்கான தேர்வு குறித்த அறிவிப்பை தமிழக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம், அச்சுறுத்தல் காரணமாக தற்போது கல்லூரிகள் விடுமுறையில் இருக்கின்றன. இந்த காலம் கலை, அறிவியல் கல்லூரிகளில் தேர்வுகள் நடைபெறக்கூடிய ஒரு காலகட்டம். ஆனால் தற்போது கல்லூரிகள் மூடப்பட்டு இருப்பதாலும், தற்போதைய சூழலில் மே 3ஆம் தேதி வரைக்கும் கல்வி நிறுவனங்களில் இயங்காது என்ற நிலை இருக்குகின்றது.
இத்தகைய சூழ்நிலையில் பல்கலைக்கழக தேர்வுகளை ஒத்திவைப்பதாக அறிவிப்புகளை பல்கலைக்கழகங்கள் வெளியிட்டு வந்தன. எனவே மாணவர்களுக்கு எப்போது தேர்வுகள் நடைபெறும் என்று தொடர்ந்து குழப்பங்கள் நீடித்து வந்தது. தற்போது உயர்கல்வித்துறை அதற்கான ஒரு முடிவை எடுத்திருக்கிறது. அதாவது கல்லூரிகளுக்கு தற்போது நடைபெற வேண்டிய தேர்வுகள் அடுத்த கல்வி ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும் என்று உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.