Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

அடேங்கப்பா..! கருவேப்பிலை இத்தனை நோய்களை விரட்டுமா ?

கறிவேப்பிலை இலையை அரைத்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர கண்ணாடி அணிய வேண்டிய அவசியம் இருக்காது.

பொதுவாக நிறைய பேர் சாப்பிடும்போது உணவில் கறிவேப்பிலையை பார்த்தால் அதை உடனே எடுத்து ஓரமாக வைத்து விடுவார்கள். கடைசியாக அது குப்பைதொட்டிக்குத்தான் போகும்,ஆனால் கருவேப்பிள்ளை இத்தனை நோய்களைப் போக்க உதவுகிறது என்பதை அறிந்தால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.

உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் பத்து கருவேப்பிலை இலைகளை உட்கொண்டு வரவேண்டும் இதனால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரைக்கப்பட்டு உடல் பருமன் குறைவதோடு நீரிழிவு தடுக்கப்படும். முக்கியமாக இம்முறையை மூன்று மாதம் தொடர்ந்து செய்து வந்தால் உடல் எடையில் நல்ல மாற்றத்தை கண்கூடாக காண்பீர்கள்.

அகத்திக் கீரைக்கு அடுத்து கருவேப்பிள்ளையில்  தான் அதிக சுண்ணாம்புச் சத்து இருக்கிறது கறிவேப்பிலையை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்பவர்களுக்கு தலைமுடி நரைப்பது இல்லை. ஏனென்றால் முடி கருமையாக இருக்கும் நரையைத் தடுக்கும் தன்மையும் கறிவேப்பிலைக்கு உண்டு.

தினமும் கறிவேப்பிலை இலையை அரைத்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர கண்ணாடி அணிய வேண்டிய அவசியமே வராது. பசியை தூண்டி செரிமானத்தை ஊக்குவித்து மலச்சிக்கல் ஏற்படாது தடுப்பதில் கருவேப்பிலைக்கு தனிப்பங்கு உண்டு.நாள்பட்ட இரத்த சோகை கொண்டவர்கள் உணர்ந்த கறிவேப்பிலையைப் பொடி செய்து சுடுநீர் அல்லது பாலுடன் கலந்து பருகி வர இரத்த சோகை விரைவில் குணம் ஆகும்.

வயிற்றுப்போக்குடன் இரத்தம் மற்றும் சளி வெளியேறும் நிலையைத்தான் வயிற்றுக்கடுப்பு என்று சொல்வார்கள். இந்த பிரச்சனைக்கு வீட்டிலேயே தீர்வு காண தினமும் பத்து கருவேப்பிலை இலைகளை பச்சையாக உட்கொண்டு வந்தால் வயிற்றுக் கடுப்பு குணமாகும். கர்ப்பிணி பெண்கள் காலையில் எழுந்த உடன் சோர்வாகக் காணப்படுவார்கள்.

இதனை தவிர்க்க பத்து  கருவேப்பிலை இலைகளை அரைத்து சாறு எடுத்து அத்துடன் இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பருகினால் சோர்வு நீங்கிவிடும். சிலர் பசி எடுப்பதில்லை என்றும் சுவை  எதுவுமே தெரியவில்லை என்றும் கூறுவார்கள். அதனை சரிசெய்ய கறிவேப்பிலையை அரைத்து மோரில் கலந்து அத்துடன் சீரகப் பொடி,உப்பு சேர்த்து பருகிவந்தால் பசி நன்றாக எடுக்க  தொடங்கிவிடும்.

கறிவேப்பிலை ஜூஸ் உடன் ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து பருகி வந்தால் சிறுநீரக சம்பந்தமான பிரச்சினைகள் குணமாகும்.சளி காரணமாக காய்ச்சல் ஏற்பட்டால் அந்த காய்ச்சலை கறிவேப்பிலை குணப்படுத்திவிடும் கறிவேப்பிலையுடன் சிறிதளவு சீரகம்,மிளகு,இஞ்சி  சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு உருட்டி சாப்பிட்டு பின் வெந்நீர் குடித்தால் போதும் விரைவிலேயே காய்ச்சல் குறைந்துவிடும்.

சித்தப்பிரமை பிடித்தவர்களுக்கு கறிவேப்பிலையை மஞ்சள்,ஜீரகத்துடன் கலந்து மோருடன்  கலந்து 48 நாட்கள் பருகச் செய்தால் கைமேல் பலன் கிடைக்கும். மூலச்சூடு, கருப்பைச்சூடு  ஆகியவற்றை போக்குவதில் கருவேப்பிள்ளை வல்லமை பெற்றதாகும். உடல் சூட்டினைத் தணித்து உடல் வளர்ச்சியை துரிதப்படுத்துவதில் கறிவேப்பிலைக்கு முக்கிய பங்கு உண்டு.

 

Categories

Tech |