திருப்பரங்குன்றம் ஓட்டப்பிடாரம் மற்றும் அரவக்குறிச்சி உள்ளிட்ட மூன்று தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த என்ன பிரச்சனை என்று பதில் அளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .
திருப்பரங்குன்றம் ,அரவக்குறிச்சி மற்றும் ஓட்டப்பிடாரம் ஆகிய மூன்று தொகுதிகளில் 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த கோரி திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் . இந்த வழக்கில் ஆஜரான திமுகவின் வழக்கறிஞர் வழக்கறிஞர் அபிஷேக் , வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறும் மக்களவை மற்றும் 18 தொகுதி இடைத்தேர்தலில் உடன் நிலுவையில் உள்ள 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று வாதிட்டார். நிலுவையில் உள்ள வழக்குகள் காரணமாக மூன்று தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த முடியவில்லை என தேர்தல் ஆணையம் கூறியதை சுட்டிக்காட்டிய வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி திருப்பரங்குன்றம் தொடர்பாக இடைத்தேர்தல் தொடர்பாக திமுக தொடர்ந்த மனு திரும்ப பெறப்பட்டதாக வாதிட்டார். மேலும் அரவக்குறிச்சி ஓட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளில் பொது காரணங்களுக்காக வழக்குகள் நிலுவையில் உள்ளன என்றும் வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதிட்டார் .
இந்நிலையில் இதற்கு விளக்கம் அளித்த தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞர் மூன்று தொகுதிகளில் இடைத்தேர்தல் மேற்கொள்ளக் கூடாது என்பது தங்களின் எண்ணம் இல்லை என்றும் , இடைத்தேர்தல் நடத்த கால அவகாசம் வேண்டும் என்றும் குறிப்பிபிட்டார் . இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மூன்று தொகுதிகளில் இடைத்தேர்தல் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு யாரோ தவறான அறிவுரை வழங்கியுள்ளனர் என்று குறிப்பிட்டு அந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தது என்ன பிரச்சனை என்று கேள்வி எழுப்பிய நீதிபதி இது குறித்து பதிலளிக்குமாறு தலைமை தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதி எஸ்.ஏ பாப்டே உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார் .