Categories
தேசிய செய்திகள்

கொரோனா பரவலை தடுக்க பரிசோதனைகளை அதிகளவு மேற்கொள்ள வேண்டும் – ராகுல் காந்தி வலியுறுத்தல்!

கொரோனா பரவலை தடுக்க பரிசோதனைகளை அதிகளவு மேற்கொள்ள வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு மட்டும் போதாது என ராகுல் காந்தி கூறியுள்ளார். இன்று காணொளி மூலம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஊரடங்கு ஒரு தற்காலிக தீர்வுதான், ஊரடங்கு முடிந்து மக்கள் வெளியே வரும்போது மீண்டும் பாதிப்பு ஏற்படும் என கூறியுள்ள அவர், கொரோனா பரிசோதனை விகிதம் நமது நாட்டில் மிக குறைவாக உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

கொரோனா பரவலை தடுக்க பரிசோதனைகளை அதிகளவு மேற்கொள்ள வேண்டும் என்றும் பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் பரிசோதனைகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் இதே அளவிலான பரிசோதனை தொடர்ந்தால் கொரோனா தொற்றை கணிக்க முடியாது என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் கேரள மாநிலம் வெற்றி கண்டுள்ளது, வயநாட்டில் போதுமான கருவிகள் இருப்பதால் வெற்றி கிடைத்துள்ளது என கூறியுள்ளார். மக்களை பாதுகாக்கும் அதே நேரத்தில் பொருளாதாரத்தை முற்றிலும் ஒழித்து விடக்கூடாது, கொரோனா பாதித்த பகுதிகளில் அனைவரையும் சோதனை செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

அரசு குடோன்களில் இருக்கும் உணவு தானியங்கள் இன்னும் பொதுமக்களை சென்றடையவில்லை என அவர் புகார் அளித்துள்ளார். மாநிலங்களுக்கு அதிகமாக நிதி வழங்க வேண்டும், அப்போது தான் இந்தியா முழுவதும் ஒற்றுமையாக கொரோனோவுக்கு எதிராக போராட முடியும் என தெரிந்தார். மேலும் நான் அரசை குறை கூறவில்லை, அறிவுரை மட்டுமே வழங்குகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |