இந்தியாவுக்கு சீனாவில் ஆர்டர் செய்த ரேபிட் டெஸ்ட் கிட்டில் 3 லட்சம் உபகரணம் வந்துள்ளது என்று மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா பாதிக்க தொடங்கிய சீனாவை விட இந்தியாவில் தான் அதிக மக்கள் தொகை உள்ளதால் உலக நாடுகளின் பார்வை நம் நாட்டின் மீது விழுந்துள்ளது, கொரோனவை இந்தியா எப்படி கையாளுகின்றது என உலக நாடுகள் உற்று நோக்குகின்றன. குறிப்பாக அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் அதிகமான பரிசோதனை மேற்கொண்டு தான் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்துகின்றன.
இதே போல உலக சுகாதார நிறுவனமும் சோதனையை அதிகரிக்க வேண்டும் என்று சில வழிகளை உலக நாடுகளுக்கு வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்தியாவிலும் வேகமாக பரவிவரும் கொரோனவை கட்டுப்படுத்த அதிவேக பரிசோதனை நடத்துவதற்கு தேவையான ரேபிட் டெஸ்ட் கிட்களை சீனாவில் ஆர்டர் செய்திருந்தது. சீனாவில் ஆர்டர் செய்த கிட்டுக்கள் தற்போது இந்தியா வந்தடைந்து விட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
இன்றைய செய்தியாளர் சந்திப்பில், சீனாவில் இருந்து கிட்டத்தட்ட 6 லட்சத்து 50 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கிட்களை ஆர்டர் செய்திருந்தோம். இதில் 3 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்கள் தயாராக இருக்கின்றது. மற்றவையின் தரம் உள்ளிட்டவை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பிறகே வழங்கப்படும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இதனால் இந்தியவும் அதிகமான சோதனை நடத்தி கொரோனவை விராட்டியடிக்கும் போர் செய்ய தயாராகியுள்ளது என்று நாம் மகிழ்ச்சியடைந்து கொள்ளலாம்.