இளநீர் குளிர்ச்சியைத் தந்து உடலுக்குப் புத்துணர்ச்சியைத் தரக்கூடியது. அதிக அளவு தாது உப்புக்கள் இருப்பதால்தினமும் ஓர் இளநீர் குடிப்பதை வழக்கமாக்கிக்கொள்ளலாம். இந்தக் கோடையில் வெப்பத்தைத் தணிக்க இளநீர் ரெசிப்பிகளை செய்து சாப்பிடுங்கள்.
இளநீர் பானகம்
இளநீர் பானகம் :
தேவையான பொருட்கள் :
லேசான வழுக்கை உள்ள இளநீர் – 2 கப்,
பனங்கற்கண்டு – 2 டீஸ்பூன்,
ஏலக்காய்த் தூள் – ஒரு சிட்டிகை.
செய்முறை :
இளநீர் வழுக்கையை மிக்ஸியில் அடித்து, பனங்கற்கண்டு, இளநீர், ஏலக்காய்த் தூள் சேர்த்து, நன்றாகக் கலக்கவும். இந்தப் பானகத்தை அப்படியே அருந்தலாம். அருமையாக இருக்கும்.
இளநீர் பிரியாணி
தேவையான பொருட்கள் :
பச்சரிசி – 2 கப்,
இளநீர் – 4 கப்,
பாசிப்பருப்பு – அரை கப்,
பொடித்த வெல்லம் – 2 கப்,
முந்திரி – 10,
திராட்சை – 10,
பச்சைக் கற்பூரம் – 2 சிட்டிகை,
தேங்காய்ப் பால் – ஒன்றரை கப்,
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு,
இளநீர் வழுக்கைத் தேங்காய் (மசித்தது) – ஒரு கப்,
குங்குமப்பூ – 2 சிட்டிகை
செய்முறை :
முதலில் வாணலில் பாசிப்பருப்பை வாசனை வரும் வரை வறுத்து வைத்துக்கொள்ளவும். இந்த பருப்புடன் அரிசியைச் சேர்த்துக் கழுவி குக்கரில் போட்டு இளநீர், இளநீர் வழுக்கைத் தேங்காய், தேங்காய்ப்பால் சேர்த்து நான்கு விசில்விட்டு குழைய வேகவிடவும்.
சூடு தணிந்ததும் குக்கரைத் திறந்து பொடித்த வெல்லம் சேர்த்துக் கிளறவும். இப்போது பொங்கல் இளகி வரும். கெட்டியாகும் வரை கிளறி வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துக் கலந்து குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள், பச்சைக் கற்பூரம் சேர்த்து மீண்டும் கிளறவும். இறக்கி வைத்து சூடாக பரிமாறலாம்.