Categories
கிரிக்கெட் விளையாட்டு

என்னா அடி… தோனியை என்னால் மறக்க முடியாது… ஐபிஎல் அனுபவத்தை பகிர்ந்த டூ பிளசிஸ்!

சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் ஃபாப் டூ பிளசிஸ், தனக்கு மிகவும் பிடித்த தருணங்கள் குறித்தும், தோனி மற்றும் ரெய்னா குறித்தும் தமது கருத்தை வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரருமாக வலம் வருபவர் பாப் டூ பிளசிஸ். இவர் தற்போது சிஎஸ்கே அணிக்காக விளையாடிய அனுபவம் பற்றியும், தனக்கு பிடித்த ஐபிஎல் தருணங்கள் பற்றியும் வீடியோ ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்..

My insider knowledge of CSK will help us beat Dhoni's team: Du ...

I see him as the best finisher in the game: Faf du Plessis on MS ...

கடந்த ஆண்டு ஆர்.சி.பி அணியுடனான ஆட்டத்தின் போது நாங்கள் 60 ரன்களுக்கு, 6 அல்லது 7 விக்கெட்டுகளை இழந்திருந்தோம். அப்போது நான் 90 ரன்களுக்கு சிஎஸ்கே அணி ஆல் அவுட் ஆகிவிடும் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் தோனி களத்தில் இருந்ததால், அந்த சூழ்நிலையை நிதானமாகக் கையாளுவார் என்று எண்ணிக்கொண்டிருந்தோம். நாங்கள் நினைத்ததற்கு மாறாகவே அவர் அதிரடியாக விளையாடி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

MS Dhoni's 48-ball 84 against RCB my most favourite IPL 2019 ...

இறுதியில் ஒரு ஓவருக்கு 26 ரன்கள் என்ற இலக்கு தேவையாக இருந்தது. ஆனால் சிறிதும் கவலைப்படாமல் தோனி சிக்சர்களை விளாசி அதிரடியில் அனைவரையும் மிரட்டினார்.. அந்தப் போட்டியில் தோனி 40 பந்துகளில் 87 ரன்களை விளாசியது எனது வாழ்நாளில் என்றும் மறக்க முடியாத தருணம்.

Faf du Plessis picks Suresh Raina's 53-ball ton against Kings XI ...

அதேபோல 2013 ஆம் ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது எங்கள் அணியின் சுரேஷ் ரெய்னா, நாங்கள் யாரும் நினைத்துப்பார்க்காத ஒரு இன்னிங்ஸை ஆடினார். அவர் தனியாக அணியை வழிநடத்தி போட்டியை வென்று கொடுத்தார். மேலும் அந்தப் போட்டியில் அவர், 53 பந்துகளில் 6 சிக்சர்கள், 7 பவுண்டரிகளை விளாசி சதமடித்து அசத்தியது மிகவும் சிறப்பான தருணம் என தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இம்மாதம் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்த 13ஆவது ஐபிஎல் சீசன் தொடர் தற்போது காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |