மத்திய பிரதேசத்தில் இன்று ஒரே நாளில் 142 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில், இந்தூரில் 110, போபாலில் 12, காண்ட்வாவில் 17 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1,120 ஆக அதிகரித்துள்ளது. அதில் 53 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 70 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 826 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 28 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்து வந்த நிலையில் இன்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது. இது ஒரு நல்ல அறிகுறியாக பார்க்கப்படுகிறது. இதையடுத்து நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,759 ஆக உயர்ந்துள்ளது.
அதில், 10,824 பேருக்கு தற்போது சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் குணமடைந்தவர்களின் 1,514 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதுவரை 420 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், மத்திய பிரதேசத்தில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று காலை 980 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 1,120 ஆக அதிகரித்துள்ளது. மேலும், மத்திய பிரதேசம் இந்தூரில் தான் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.