Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப ராசி … எவருக்கும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம்… சிற்றின்ப செலவுகள் அதிகரிக்கும்….!!!

கும்ப ராசி நேயர்களே …. இன்று எவருக்கும் தேவையற்ற வாக்குறுதிகளை கொடுக்க வேண்டாம். நிதானமான அணுகுமுறை நன்மை பெற்று கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். முக்கிய செலவுகளுக்கு பணம் கிடைக்கும். பணியாளர்கள் பாதுகாப்பை பின்பற்ற வேண்டும்.இன்று ராஜாங்க ரீதியான காரியங்கள் கை கொடுக்கும்.

வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். பொருள் சேர்க்கை இருக்கும். சிற்றின்ப செலவுகள் அதிகரிக்கும். நண்பர்களுக்கு உதவி செய்வீர்கள். பணவரவு சிறப்பாக இருக்கும். வீண்பழி அவ்வப்போது ஏற்படலாம்மற்றவர்களுக்கு உதவி செய்யும் போது ரொம்ப கவனமாக இருக்க வேண்டும்.அதாவது எந்த ஒரு விஷயத்தையும் நீங்கள் கொஞ்சம் ஆலோசனை செய்து மேற்கொள்ள வேண்டும்.

கூடுமானவரை பெரியோர்களிடம் ஆலோசனை கேட்டு செய்யுங்கள் ரொம்ப சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை அஜீரண கோளாறு வயிற்று உப்புசம் போன்ற பிரச்னைகள் சந்திக்கக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். சரியான உணவை தேர்ந்தெடுத்து உட்கொள்ளுங்கள்.

முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மேலும் உங்களுக்கு அதிஷ்டத்தை  கொடுக்கும் அதுபோலவே இல்லத்தில் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு செய்யும் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்டமான எண்கள் :4 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் :பிங்க் மற்றும் வெள்ளை

Categories

Tech |