Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக ராசிக்கு … பெருந்தன்மையுடன் நடந்து கொள்வீர்கள் … உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும் …!!

கடகம் ராசி அன்பர்களே…! இன்று பெருந்தன்மையுடன் நீங்கள் நடந்து சுயகௌரவத்தை பாதுகாத்து விடுவீர்கள்.  தொழில் வியாபாரம் செழிக்க புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.  பணவரவு சுமாராக தான் இருக்கும்.  உடல் நலத்திற்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளலாம்.        இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயந்து வேலை செய்ய வேண்டி இருக்கும்.  உழைப்பு அதிகரிக்கும்.  உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் இல்லாமல் போகும்.  குடும்பத்தில் உறவினருடன் கருத்து வேறுபாடு அவ்வப்போது வந்து செல்லும்.  வீட்டில் உள்ள பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது ரொம்ப நல்லது.

மிக முக்கியமாக விலை உயர்ந்த பொருட்களை மிகக்கவனமாக கையாள வேண்டும்.  தேவையில்லாத விஷயத்திற்காக கோபப்பட நேரிடும்.  இன்று உங்களுக்கு சந்திராஷ்டம தினம் உள்ளதால் கொஞ்சம் பொறுமையாக நிதானமாக செயல்படுங்கள் யாரிடமும் கோபப்படாதீர்கள்.  அனைவரிடமும் அன்பாக பழகும் முயற்சி செய்யுங்கள்.  கொடுக்கல் வாங்கல்கள் ஓரளவு சிறப்பை கொடுக்கும்.  நிதி மேலாண்மையில் ரொம்ப கவனமாகவே இருக்க வேண்டும்.  யாருக்கும் வாக்குறுதிகள் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம்.

அதேபோல எந்த ஒரு விஷயத்தையும் பெரியோரின் ஆலோசனை இல்லாமல் மேற்கொள்ளாதீர்கள்.  இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது.  பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்துமே ரொம்ப சிறப்பாகவே  நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை :  வடமேற்கு

அதிர்ஷ்ட எண் :  7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் :  பிங்க் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |