Categories
ஆன்மிகம் இந்து

வாழ்வில் வரும் கஷ்டம்… அனைத்திற்கும் காரணம் உண்டு… ஸ்ரீ கிருஷ்னன்..!!

இறைவன் காரணமில்லாமல் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை. அதற்கு ஸ்ரீ கிருஷ்னன் கூறிய பதில்.

ஒரு ஹிந்து, பிராமணன் என்று தன்னைக் கூறிக் கொள்பவர்கள் கண்டிப்பாக மகாபாரதத்தை படித்திருக்க வேண்டும் அல்லது கேட்டிருக்க வேண்டும். அதில் பரமாத்மா ஸ்ரீ கிருஷ்ணன் அர்ஜுனனை பார்த்து யுத்தம் முடிந்து வெகுநேரம் ஆகிவிட்டது இன்னும் தேரிலிருந்து இறங்காமல் தேரில் அமர்ந்து கொண்டு இருக்கிறாய்.

உடனே கீழே இறங்கு என்று அவசரமாக ஒரு கட்டளையை கூற அர்ஜுனனும் உடனே தேரை விட்டு இறங்கினார். மேலும் தேரிலிருந்து இறங்கிய அர்ஜுனனை தேரை விட்டு தூரப்போ என்று கூறினார். அர்ஜுனனுக்கு ஏன் கிருஷ்ணன் இவ்வாறு கூறுகிறார் என்று புரியாமல், தன்னை யுத்தம் முடிந்தவுடன் இறக்கி விடுவதுதானே மரபு இது கூட இவருக்குத் தெரியாதா.?

வழக்கத்திற்கு மாறாக ஒரு அதிகார தோரணையில் ஸ்ரீகிருஷ்ணன் கூறியது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது. போரில் பெற்ற வெற்றியை கூட நினைக்க முடியாமல் சிந்தனையில் இருக்கும் பொழுது ஸ்ரீ கிருஷ்ணன் தேரில் இருந்து அவசரமாக கீழே இறங்கி அர்ஜுனனை வந்து கட்டிக்கொண்ட உடன் தேர் பயங்கரமாக தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

அப்பொழுது அர்ஜுனனை பார்த்து ஸ்ரீகிருஷ்ணன் அர்ஜுனா நான் கூறிய அவசர வார்த்தைகளை பொருட்படுத்த வேண்டாம். அந்த நேரத்தில் என்னால் பொறுமையாக இருக்க முடியவில்லை எதிரிகள் பல வகைகளில் அஸ்திரங்களை உன் மீது ஏந்தி உன்னை அழிக்க முயன்றபோது, அந்த கொடிய சக்திகளை ஆஞ்சநேயன் தேரின் மீது கோடி ரூபத்தில் அமர்ந்துகொண்டு ஒரு பாதியையும், நான் மறுபாதியை தடுத்து நிறுத்தி வந்தோம்.

ஆஞ்சநேயர் இறங்கியவுடன் முழுவதும் என் மீது தாக்கும் பொழுது நாம் இருவரும் அதிலிருந்து மீள, இந்த உபாயம் செய்யப்பட்டது என்று கூறினார். உடனே தான் செய்த தவறுக்கான எண்ணத்திற்கு அர்ஜுனன் ஸ்ரீ கிருஷ்ணனிடம் வருந்துவதாக பாரதம் கூறுகிறது.

Categories

Tech |