சமூக வலைதளங்களுக்கு தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களோடு இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் குறித்து கூட்டம் நடத்த உள்ளது
மக்களவைத் தேர்தல் ஆனது இந்தியா முழுவதும் 7 கட்டமாக நடைபெற உள்ளது இதனை தொடர்ந்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று தேர்தல் நடைபெற உள்ளது இதனை அடுத்து சமூக வலைத்தளங்களில் பல அரசியல் கருத்துக்கள் பரவி வருகின்றன இவற்றுள் போலியான கருத்துக்களும் அதிகமாக பரவி வருகின்றன இதனைத்தொடர்ந்து facebook whatsapp twitter tic tok யூடியூப் போன்ற சமூகவலைதளங்களுக்கு தலைமைப் பொறுப்பில் இருக்கக்கூடியவர்களுடன் தேர்தல் குறித்து கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது இந்திய தேர்தல் ஆணையம் இந்த கூட்டத்திற்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைவர் தலைம வகிப்பார்
மேலும் இந்த விவாதத்தில் பலர் போலியான கருத்துக்கள் தேர்தல் குறித்தும் தேர்தலில் போட்டியிடவுள்ள கட்சிகள் குறித்தும் பரவி வருகிறது இதனால் கலவரங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் இதனை தடுப்பதற்காக போலியான கருத்துக்களை முடக்குவதற்கான உத்தரவுகளை சமூக வலைதளத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது
மேலும் தேர்தல் நடைபெறுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன் நடக்கக்கூடிய எந்த கட்சி வெற்றி பெறும் போன்ற கருத்துக்கணிப்புகளை தவிர்க்க வேண்டும் என்று சமூக வலைதளங்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது